உத்தரகாண்ட் மாநிலத்தில் நிவாரண பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் சில மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க 3 பேர் கொண்ட குழுவினருடன் ஹெலிகாப்டர் ஓன்று புறப்பட்டு சென்றது. இந்த ஹெலிகாப்டர் உத்தர்காஷி மாவட்டம் அருகே சென்ற போது திடீரென விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்தனர்.
இது பற்றி மாநில பேரிடர் மீட்பு குழுவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நிவாரண பொருட்களை எடுத்து சென்ற ஹெலிகாப்டரில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மீட்பு குழுவில் இருந்து 10 பேர் அனுப்பப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி இன்னும் தெரியவில்லை எனவும் தெரிவித்தனர்.