Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்…. நெல்லையில் நடந்த சோகச் சம்பவம்….!!

நெல்லையில் காவல்துறையினுடைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஜான்சன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் ஜான்சன் நெல்லை சந்திப்பிலிருக்கும் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். தற்போது தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவிற்கான தடுப்பு பணியில் ஜான்சன் தீவிரமாக ஈடுபட்டார்.

இதனையடுத்து அவருக்கு கடந்த 21 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜான்சனுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Categories

Tech |