Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் மட்டும்… மொத்தம் 1600 வாகனங்கள் பறிமுதல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக நேற்று ஒரே நாளில் மட்டும் 1,600-க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து முகக் கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிலும் நேற்று ஒரே நாளில் மட்டும் தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிந்த குற்றத்திற்காக 1600-க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |