உடல் நிலை சரியில்லாத காரணத்தால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல வெள்ளமடம் பகுதியில் பெருமாள் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பெருமாள் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது நோய் குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பெருமாள் தனது வீட்டு பக்கத்தில் இருக்கும் வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த நாசரேத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.