Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மளிகை பொருட்கள் விற்பனையா…? அதிகாரிகளின் திடீர் சோதனை… உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…!!

மருந்து கடைகளில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் கடை உரிமையாளர்களை எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தாசில்தார் தமிழ்ச்செல்வி தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அதிகாரிகள் மருந்துகளை தவிர மளிகை பொருட்கள் உள்ளிட்ட வேறு எந்த பொருட்களையும் மருந்து கடையில் விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அவ்வாறு வேறு பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஊரடங்கு சமயத்தில் வெளியே சுற்றித் திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |