கொரோனா ஊரடங்கினால் சங்கீத கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு தரும் நிவாரணத்துக்காக அவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜை, ஆயுஷ் ஹோமம், மணிவிழா, சஷ்டியப்தபூர்த்தி போன்ற பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பூஜைகளின் போது நாதஸ்வரம், தவில் ஆகியவை இசைக்கப்படும். இதன்மூலம் சங்கீதக் கலைஞர்கள் வருமானம் ஈட்டி வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.
ஆனால் தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோவில்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கோவிலில் யாக கால பூஜைகள் எதுவும் நடைபெறாத நிலையில் சங்கீத கலைஞர்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் வருமானம் இல்லாமல் அரசு உடைய நிவாரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.