Categories
மாநில செய்திகள்

Shocking News: பல பள்ளிகளில் பாலியல் தொல்லை…. அடுத்தடுத்த பரபரப்பு ….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர், செட்டிநாடு வித்யாஷ்ரம், ஜவஹர் வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் சிலரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை பாடகி சின்மயி ஆதாரத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் அம்பலப்படுத்தி வருகிறார்.

Categories

Tech |