Categories
தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல் கட்டணம்…. கூகுளின் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

உலகிலேயே மிகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. அதற்கு கோடிக்கணக்கில் பயனாளர்கள் உள்ளனர். அது பல சேவைகளை தனது பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. அதனால் நாளுக்கு நாள் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இதுவரை இலவச சேவையாக இருந்த கூகுள் போட்டோஸ் வசதிக்கு, ஜூன் 1 முதல் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இனிமேல் கிளவுட் வசதி மூலம் 15 ஜிபி வரை மட்டுமே இலவசமாக புகைப்படங்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்றும், அதற்கு மேல் சேமிக்க வேண்டுமெனில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூகுள் அறிவித்துள்ளது.

Categories

Tech |