தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசுக்கு பலரும் உதவி வருகிறார்கள். கொரோனா நிவாரண நிதி திரட்டி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு,முக்கிய பிரபலங்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நிதி அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி தேவையற்ற பொருள்களை விற்று கொரோனா நிதி திரட்டி வருகிறார். இந்த கடுமையான காலத்தில் நாம் நிறைய பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையற்ற வாழ்வில் நாம் நமக்கு கிடைத்த வளங்களுக்கு நன்றி உடையவர்களாகவும், தேவையுள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற வீடியோ மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.