Categories
மாநில செய்திகள்

#PSBB பள்ளி ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை தேவை…. டாக்டர் மகேந்திரன்….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில் பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய,#PSBB பள்ளி ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைய வழி கல்வியில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுபோல் இன்னும் வெளியே வராமல் இருக்கும் பாலியல் குற்றங்களை அரசு தீவிர விசாரணை செய்து வெளிப்படுத்த வேண்டும் என்று டாக்டர் மகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |