Categories
உலக செய்திகள்

நினைவாக பாட்டிலில் மணல் எடுத்த இளைஞர்கள்…. திருட்டு வழக்கில் 1 ஆண்டு சிறை..!!

இத்தாலியில் கடற்கரை மணலை நினைவுப் பொருளாக எடுத்துச் சென்ற இரண்டு சுற்றுலா பயணிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

இத்தாலி சர்த்தீனிய கடற்கரையிலிருந்து மணல், கூழாங் கற்கள் மற்றும் கிளிஞ்சல்களை எடுத்துச் செல்வதற்கு 2017 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியான கடற்கரையில் 40 கிலோ மணலை திருடியதாக கூறி இரண்டு french சுற்றுலா பயணிகள் மீது கடந்த வாரம் வழக்கு பதியப்பட்டுள்ளது. இருவரும் 14 பாட்டில்களில் நிரப்பப்பட்டு இருந்த மணலுடன் போர்ட்டோ டோரிசில் இருந்து படகு வழியாக பிரான்சுக்கு செல்ல முயலும்போது பிடிபட்டதாக கூறப்படுகிறது.

Image result for இத்தாலி மணல்

விசாரணையில் விடுமுறை நினைவு பரிசாக மணலை எடுத்து செல்ல முயற்சித்ததாகவும் இது சட்ட விதிமீறல் என்று தங்களுக்குத் தெரியாது என்றும் சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இரண்டு பேருக்கும் ஒன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு பிரிட்டனில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மணல் எடுத்து சென்றதற்காக 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |