நெல்லையில் முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் அனைத்து கடைகளையும் திறந்து வைப்பதற்கு அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் டவுன், நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை மார்க்கெட், பேட்டை, மேலப்பாளையம் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதி கடை வீதிக்கு சென்றனர். அதன்பின் அவர்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை கடையிலிருந்து வாங்கி சென்றனர்.