Categories
மாநில செய்திகள்

மேலும் 15 நாட்களுக்கு…. சிறப்பு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே-10 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ரயில்களில் பயணிகளின் போக்குவரத்து குறைந்தததால் 6 சிறப்பு ரயில்கள் மே-31 வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் நேற்று முதல் ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே ரயில் சேவை மேலும் 15 நாட்களுக்கு ரத்து நீட்டிக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம்-நாகர்கோவில், நாகர்கோவில்- தாம்பரம் சிறப்பு ரயில் சேவையும், நெல்லை-பாலக்காடு, பாலக்காடு-நெல்லை ரயில் சேவையும், சென்னை சென்ட்ரல்-மங்களூரு, கொச்சுவேலி- மைசூர், திருவனந்தபுரம்- சென்னை, சென்ட்ரல்- மேட்டுப்பாளையம் ரயில் சேவையும் ஜூன் 16-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |