தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தடுப்பூசி போடுவது ஒன்றே நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாமையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே தொடங்கி வைத்துள்ளார். இருப்பினும், சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுடைய வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.