லட்சத்தீவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் நடிகர் ரஹ்மான் வேதனையுடன் ட்விட் செய்துள்ளார்.
மக்கள், எழுத்தாளர்கள் பிரபலங்கள் என லட்சத்தீவை காப்பாற்ற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். கேரள நடிகர்கள் முதல் பல பிரபலங்கள், முதல்வர் என பலரும் லட்சத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். லட்சத்தீவில் என்ன பிரச்சனை என்றால் மத்திய அரசு அங்கு புதுவித சட்டங்களைக் கொண்டு வந்ததுதான். அந்த சட்டங்கள் என்னவென்றால் யாரை வேண்டுமானாலும் ஒரு வருடம் சிறையில் அடைக்கலாம், மாட்டிறைச்சிக்கு தடை, பொது மக்களின் நிலத்தை வளர்ச்சி என்ற பெயரில் அரசு எடுத்துக் கொள்ளும், சரக்கு போக்குவரத்து கேரளாவிற்கு பதில் மங்களூருக்கு மாற்றம். புதிய மதுபான கடைகளைத் திறக்கலாம் என்பதுதான்.
இவற்றிற்கு எதிராக பல பிரபலங்கள் கொடுத்து வரும் நிலையில் நடிகர் ரஹ்மானும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது “லட்சத்தீவில் மத்திய அரசின் சட்ட மசோதாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். லட்சத்தீவில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகவும் மன வேதனையை அளிக்கின்றது. எவ்வளவு அழகான தீவு. இயற்கை அழகு மட்டுமல்ல அன்பும், ஒற்றுமையும், நம்பிக்கையும் சேர்ந்ததுதான் லட்சத்தீவு. அது அழியும் சூழல் உருவாகிவிட்டது” என்று வேதனையுடன் ட்விட் செய்துள்ளார்.