Categories
உலக செய்திகள்

கொழும்புவில் நின்ற சரக்கு கப்பல்…. திடீரென வெடித்ததால் பரபரப்பு…. தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கை கடற்படையினர்….!!

இலங்கை கடலில் வெடித்து சிதறிய சரக்கு கப்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MV X-PRESS PEARL மே மாதம் 15ஆம் தேதி இந்தியாவின் ஹசிரா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் 25 டன் நைட்ரிக் அமிலத்துடன் பல வேதிப் பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் என 1486 கன்டெய்னர்களுடன் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது.

இந்த கப்பல் மே 20ஆம் தேதி கொழும்பு துறைமுகத்தின் வடமேற்குப் பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து மே 21-ஆம் தேதி இந்த கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன்பின் மே 25ஆம் தேதி காலை தீ விபத்துக்குள்ளான கப்பலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு மீண்டும் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் கப்பலில் இருந்த 25 ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

https://twitter.com/i/status/1397070308239159296

அவ்வாறு மீட்கும் போது இரண்டு மாலுமிகள் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை செய்தி தொடர்பாளர் கேப்டன் Indika de Silva தெரிவித்துள்ளார். மேலும் தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கை கடற் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Categories

Tech |