நெல்லையில் ஊரடங்கு விதியை மீறிய 47 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணனின் ஆணையின்படி ஊரடங்கு விதியை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
அதன்படி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் ஊரடங்கு விதியை மீறிய 45 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் 47 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.