நடிகை நயன்தாராவுடன் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் திடீரென சம்யுக்தா தனது சக போட்டியாளரான ஆரியைப் பற்றி தவறான வார்த்தைகள் கூறியதால் ஆரி ரசிகர்கள் கோபமடைந்தனர். இதனால் சம்யுக்தா அடுத்த வாரமே மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சம்யுக்தா சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாராவுடன் சம்யுக்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.