லட்சத்தீவு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பினராய் விஜயன் கண்டனம் ஒன்றை தெரிவித்துள்ளார்.
மக்கள், எழுத்தாளர்கள் பிரபலங்கள் என லட்சத்தீவை காப்பாற்ற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். கேரள நடிகர்கள் முதல் பல பிரபலங்கள், முதல்வர் என பலரும் லட்சத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். லட்சத்தீவில் மத்திய அரசு புதிய விதமான சட்டங்களை பிறப்பித்தது அங்கு வாழும் மக்களுக்கு மிகப் பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்காக பலரும் குரல் கொடுத்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து தற்போது கேரளா மாநில முதல்வர் பினராய் விஜயன் லட்சத்தீவு மக்கள் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் கலாச்சாரம் மீதான சவால்களை ஏற்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். லட்சத்தீவுகளுடன் ஒரு வலுவான உறவும், ஒத்துழைப்பும் கொண்ட நீண்ட வரலாறு கேரளாவிற்கு உள்ளது. அதை முறியடிக்க நினைக்கும் வஞ்சகமான முயற்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.