ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃப்ரட், தொற்றால் பாதிக்கப்பட்டதை கண்ணீருடன் தெரிவித்தார் .
இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடரில், ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் போட்டியில் இடம்பெற்றிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அனைவரையும், பிசிசிஐ பாதுகாப்பாக அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ,நியூசிலாந்து வீரரான டிம் செய்ஃப்ரட், சில நாட்களுக்கு முன் தொற்றிலிருந்து குணமடைந்து தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவரிடம் தொற்றால் நீங்கள் பாதிக்கப்பட்ட போது ,உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது என்று நேரலையில் கேள்வி கேட்கப்பட்டது. அந்தப் பேட்டியில் அவர் பதிலளிக்கும்போது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழ தொடங்கி விட்டார்.
அவர் கண்ணீருடன் அதற்கு பதிலளித்த போது, எனக்கு கொரோனா தொற்று உறுதியானது , என்ற செய்தியைக் கேட்டதும், எனக்கு இந்த உலகமே, ஒரு நொடியில் நின்று விட்டது போல் இருந்தது. அந்த தருணம் தான் என்னுடைய வாழ்க்கையில் நான் அதிகமாக பயந்தேன். தொற்றால் நான் பாதிக்கப்பட்டபோது, கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளமிங் ஆகியோர் எனக்கு நிறை நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்கினர். ஆரம்பத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது ஆனால் அதன் பின்பு சில நாட்களில் அதிலிருந்து மறைந்து குணமடைந்தேன் என்று அவர் கூறினார்.தற்போது வீட்டில் தனிமையில் இருக்கும் அவர் ,இன்னும் 2 மாதங்களில் திருமணம் செய்ய உள்ளார் .இது பற்றி அவர் கூறும்போது ,என் வருங்கால மனைவி நான் குணமடைந்து திரும்ப வந்ததை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார். இன்னும் சில நாட்களுக்குள் இருவரும் இணைந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக, அவர் கூறினார் .