நகைச்சுவை நடிகர் சூரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களையும் போட்டுக்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. தமிழக மக்களை ஊக்குவிக்கும் வகையில் திரைப்பட பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டு மக்களையும் போட்டுக் கொள்ள வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நகைச்சுவை நடிகர் சூரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் நானும் என் மனைவியும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டோம். எனக்கு மட்டும் இரண்டு நாட்கள் உடல் சோர்வும், ஊசி போட்ட இடத்தில் வலியும் இருந்தது. இப்போது நான் நன்றாக உள்ளேன். எல்லோரும் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்காகவும் நாட்டுக்காகவும் இதை செய்யுங்கள் என்று ட்விட் செய்துள்ளார்.