அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணங்கி நாயக்கன அள்ளி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் எதிர்பாராதவிதமாக முதியவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணாபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உயிரிழந்த முதியவரின் விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.