Categories
மாநில செய்திகள்

”தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்” பேச்சுவார்த்தையில் உடன்பாடு…!!

பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் காரணமாக தனியார் குடிநீர் லாரி போராட்டம் வாபஸ் பெறப்பட்ட்டுள்ளது.

நிலத்தடி நீர் உறிஞ்சுவதை தடுக்க நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.அந்த வகையில் உரிமம் இல்லாமல் தண்ணீர் எடுக்கும் தனியார் தண்ணீர் லாரி மீது வழக்கு பதிவு செய்து லாரி சிறப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் போராட்டம் அறிவித்து இன்று காலை முதல் வேலை நிறுத்தத்தை நடத்தினர். மேலும் எங்களுக்கு நிரந்தர உரிமம் வழங்க வேண்டும் , காவல்துறையினர் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைதத்து போராட்டத்தை மேற்கொண்டனர்.

Image result for தண்ணீர் லாரிகள் ஸ்ட்ரைக்

இந்நிலையில்  நகராட்சி . குடிநீர் வழங்கல் துறை செயலாளர் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தை உடன்பட்டதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இது குறித்து தனியார் லாரி உரிமையாளர் சங்கம் தலைவர்  நிஜம் லிங்கம் கூறுகையில் , அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் பேச்சு வார்த்தை எல்லாம் திருப்திகரமாக நாளையும் வேலை நிறுத்தம் தொடர்ந்திருந்தால் மக்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். தமிழக அரசை வலியுறுத்தியுள்ளோம். 20 நாளுக்குள் லைசென்ஸ் எல்லாம் கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றனர்.உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் , தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேம் என்று தெரிவித்தார்.

Categories

Tech |