Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பில்…. ஆசிரியர்-மாணவர்கள் செயல்பாடு…. விரைவில் வழிகாட்டு நெறிமுறை…!!!

சென்னை #PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசமான சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் அனைத்து மாணவர்களுக்குமே ஆன்லைன் வகுப்பு மூலமாக படித்துக்கொண்டிருக்கும் சூழலில், இந்த மாதிரியான சமபவத்தால் மாணவர்களின் பெற்றோர்களிடையே ஒருவித கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் – மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிட இருக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |