தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதனால் ரயில்களில் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. அதன் காரணமாக பல்வேறு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி தாம்பரம் – நாகர்கோவில், நாகர்கோவில்- தாம்பரம் சிறப்பு ரயில் சேவையும், நெல்லை – பாலக்காடு, பாலக்காடு- நெல்லை ரயில் சேவையும், சென்னை சென்ட்ரல்- மங்களூரு, கொச்சுவேலி- மைசூரு, திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல்- மேட்டுப்பாளையம் ரயில் சேவையும் ஜூன் 16-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.