ப.சிதம்பரம் நடவடிக்கை குறித்து டெல்லியில் இன்று இரவு 8.15 மணிக்கு காங். மூத்த தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது செய்ய வேண்டுமென்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவையும்அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ப.சிதம்பரத்தின் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்தும் வகையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் செயல்பட்டு வருகின்ற நிலையில் டெல்லியில் இன்று இரவு 8.15 மணிக்கு காங். மூத்த தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். அதே போல ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் உள்ளிட்ட வழக்கறிஞ்சர்களும் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். இதில் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று தெரிய வரும்.