Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூன் 3-ஆம் தேதி முதல்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.  தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது.

மேலும் முதல் தவணை பணத்தை வாங்காதவர்கள் மே 31ம் தேதிக்குள் வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை 2000 ரூபாய் ஜூன் 3ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை மற்றும் 14 பொருள்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் ஜூன் 3ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |