67 வயதான கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 67 வயதான கிருஷ்ணன் என்பவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரின் மனைவி சாரதாம்பாள். இவர் கடந்த 19ஆம் தேதி இரவு தனது மனைவியை கடுமையாக தாக்கி, அருவாமனையால் சாரதாம்பாளை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இதையடுத்து அந்த ஊரில் பதுங்கி இருந்த கணவரையும் அவர்கள் கைது செய்தனர்.
அவரை விசாரித்த போது பல உண்மைகள் தெரிய வந்தது. அவர் பத்து வருடங்களுக்கு முன்பு பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அது சாரதாம்பாளுக்கு தெரிந்து இருவருக்கும் இடையே மிகப் பெரிய சண்டை வந்ததும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த 17ஆம் தேதி இருவருக்கும் தகராறு அதிகமான காரணத்தினால் ஆத்திரத்தில் கிருஷ்ணன் அவரை அறுவாமனையால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.