Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்க யாரும் போகக்கூடாது… தீவிர கண்காணிப்பு பணி… மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகள்…!!

கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இருக்கும் இடத்தையை  தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இந்த மாதம் 24-ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பூபால சமுத்திரத்தில் வசிக்கும் பல பேருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டு  சிலபேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இந்நிலையில் பஞ்சாயத்து நிர்வாகத்தினரின் சார்பில் கம்புகளை குறுக்கும் நெடுக்குமாக கட்டி தடுப்புகளாக அமைத்து அப்பகுதிக்குச்செல்லும் சாலையை அடைத்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதிக்கு பொது மக்கள் யாரும் உள்ளே இருந்து வெளியேயும், வெளியே இருந்து உள்ளேயும் செல்ல முடியாதபடி தடுப்புகளை அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகத்தினரின் சார்பில் அப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |