Categories
தேசிய செய்திகள்

இன்று “தேசிய கருப்பு நாளாக” கடைபிடிக்கவும்….திருமாவளவன்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு அவர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி தற்போது வரை போராட்ட களத்தில் 450க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

அதனால் ரயில் மறியல் போராட்டம், உண்ணாவிரதம், மாபெரும் டிராக்டர் பேரணி உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்திய போதிலும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் போராட்டம் தொடங்கிய ஆறு மாதங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு மே 26-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். மேலும் பிரதமர் மோடி பதவியேற்று இன்றுடன் ஏழு ஆண்டுகள் முடிவடைவதை ஒட்டியும் கருப்பு தினம் கடைபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மோடி பதவியேற்ற மே 26ம் தேதியை விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, “தேசிய கருப்பு நாளாக”கடைபிடிக்க வேண்டும் என திருமாவளவன் எம்பி வித்துள்ளார். எல்லாத் தளங்களிலும் தோல்வி அடைந்து விட்ட மோடி அரசு, ஒரு மக்கள் விரோத அரசு. அதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று “தேசிய கருப்பு நாளாக” கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |