உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகமெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மொடெர்னா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் சார்பாக தங்களுக்கு தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தலாம் என்று கூறியுள்ளனர். மேலும் 3,700 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களில் 93% சதவிகிதம் பேர் இதன் மூலம் எதிர்ப்புசக்தி பெற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.