Categories
தேசிய செய்திகள்

இன்று வானில் தோன்றும் சந்திரகிரகணம்…. ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கும் தெரியுமா…??

வானில் தோன்றும் அரிதான ரத்த நிலா இன்று மாலை வானில் தோன்றும் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோளரங்க இயக்குனர் தேவி பிரசாத் திவாரி கூறுகையில், “சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை நாம் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம். இந்நிலையில் இன்று மிகவும் அரிதான, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மாலை 3:15 முதல் 6:22 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கிரகணத்திற்கு பின் நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. பூமி மற்றும் சந்திரன் ஒன்றுசேரும்போது, ​​மொத்த சந்திர கிரகணத்தை உருவாக்கும் வானத்தின் மிக அற்புதமான காட்சியை வெறும் கண்களால் பார்க்கலாம். இது சூரிய கிரகணத்தைப் போலல்ல, அதைப் பார்க்க உங்களுக்கு சிறப்பு கண்ணாடிகள் அல்லது கிஸ்மோஸ் தேவையில்லை. தொலைநோக்கி உள்ளிட்ட கருவிகளை கொண்டு பார்க்கும் போது அதனுடைய தோற்றம் தெளிவாக தெரியும்.

தோன்ற இருக்கும் இந்த சந்திரகிரகணம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கும்? என்றும், அது ஏன் சூப்பர் மூன்? என அழைக்கப்படுகின்றது எனவும் நாசா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பூமியைச் சுற்றியுள்ள சந்திரனின் சுற்றுப்பாதையின் வடிவம் சரியான வட்டம் அல்ல, அது ஒரு நீள்வட்டப்பாதை ஒரு முழு நிலவு அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடையும் போது, ​​அது ஒரு சூப்பர்மூன் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் சூரியன் மற்றும் பூமியின் நேர்கோட்டில் நிலா வந்தடையும்போது பூமியின் நிழல் நிலவின் மீது முழுமையாக செல்லும். மறுபுறம் சூரியனின் ஒளி நிலவின் மீது முழுமையாகப் படும். இதன் விளைவாக சந்திரன் இரத்த சிவப்பு நிறத்தில் தோன்றும். சந்திரனின் சிவப்பு சாயல் பூமியின் வளிமண்டலத்தின் மூலம் ஒளிவிலகப்பட்ட சிவப்பு-ஆரஞ்சு ஒளியால் சிவப்பு நிறமாக தென்படும். மேலும் ஏராளமான மேகங்கள் அல்லது தூசுகள் காரணமாகவும் சிவப்பு நிறத்தில் தோன்றும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |