நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர் சிம்பு பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதன்பின் இவர் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் . விரைவில் வெற்றிமாறன், சிம்பு இணையும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.