இந்தியாவில் புதியதாக பென்லி நிறுவனத்தின் லியோன்சினோ 500 மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.
பென்லி நிறுவனத்தின் லியோன்சினோ ஸ்டிரீட் நேக்கட் மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகமான டி.ஆர்.கே.502 ட்வின் மாடல்களில் வழங்கப்பட்ட என்ஜின்களே வழங்கப்பட்டுள்ளது . இந்த லியோன்சினோ 500 மாடலானது டி.என்.டி.300 மற்றும் டி.ஆர்.கே.502 மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது . குறிப்பாக இந்தியாவில் இதன் விலை ரூ. 4.79 லட்சம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது .
இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10,000 என கூறியுள்ளது . இதுமட்டுமின்றி , லியோன்சினோ 500 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்பட்டுள்ளது . மேலும் லியோன்சினோ 500 மாடலில் வழக்கமான வட்ட வடிவம் கொண்ச ஹெட்லேம்ப் மற்றும் அதிநவீன ப்ரோஜெக்டரே வழங்கப்பட்டுள்ளது . இந்த மாடலின் முன்புறம் சிங்கம் போன்ற மெட்டல் ஆர்னமென்ட் வழங்கப்பட்டுள்ளது.
இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் முழுமையான டிஜிட்டல் வடிவம் கொண்டிருக்கிறது. இதில் 500சிசி பேரலெல் ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளன. இது 47.5 பி.எஸ். @8500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 445 என்.எம். டார்க் @5000 ஆர்.பி.எம். வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதன் முன்புறம் 50 எம்.எம். அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது . குறிப்பாக பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320 எம்.எம். ட்வின் டிஸ்க் செட்டப், பின்புறம் 260 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது . இந்த பென்லி லியோன்சினோ 500 மாடல் கவாசகி இசட்650, சி.எஃப்.மோட்டோ 650என்.கே. உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .