ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இருப்பதாக அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய அலுவலகத்திற்க்கே விரைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு ப.சிதம்பரம் வருவதை முன்கூட்டியே அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கே சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர்.
இதை அறிந்து கொண்ட ப.சிதம்பரம் தனது செய்தியாளர்கள் சந்திப்பை சுருக்கமாக அளித்துவிட்டு முடித்துக்கொண்டு தன்னுடைய மூத்த வழக்கறிஞ்சருடன் விரைவாக கிளம்பி சென்றார். இதனால் அந்த பகுதியில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன்பு சிபிஐ அதிகாரிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவரின் வழக்கறிஞ்சர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் உள்ளிடோர் இருந்தனர்.