ப.சிதம்பரம் வீட்டிற்குள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கோட்டை சுவர் ஏறி உள்ளே நுழைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு ப.சிதம்பரம் வருவதை முன்கூட்டியே அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கே சிபிஐ அதிகாரிகள் வந்தனர்.
இதை அறிந்து கொண்ட ப.சிதம்பரம் தனது செய்தியாளர்கள் சந்திப்பை சுருக்கமாக அளித்துவிட்டு முடித்துக்கொண்டு தன்னுடைய வழக்கறிஞ்சர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் உடன் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.அவரை பின்தொடர்ந்து வந்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் சென்று வீட்டிற்குள் நுழைய முற்பட்டனர். கதவு பூட்டி இருந்தன் காரணமாக கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து வீட்டிற்குள் சென்று தற்பொழுது காத்திருக்கின்றனர். இது மேலும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.