இன்டர்நேஷன்ஸ் என்ற அமைப்பு 59 நாடுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது.
இன்டர்நேஷன்ஸ் என்ற அமைப்பு 59 நாடுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் வெளிநாட்டவர்களை கவர்வதில் சுவிட்சர்லாந்து 30-ஆவது இடத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்தில் சுகாதாரத்திற்கு 95 சதவிகிதத்தினரும், அமைதிக்கு 95 சதவிகிதத்தினரும், போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு 96 சதவிகிதத்தினரும், அரசியல் ஸ்திரத்தன்மைக்கு 91 சதவிகிதத்தினரும், காற்றுத் தூய்மைக்கு 89 சதவிகிதத்தினரும் வாக்களித்துள்ளனர் . அதில் சுவிட்சர்லாந்தில் வலிமையான பொருளாதாரம் பணியாற்ற உகந்ததாக உள்ளதாக பெரும்பாலோனோர் தெரிவித்துள்ளனர். மேலும் சுவிட்சர்லாந்து மக்களோடு வெளிநாட்டவர் இணைந்து வாழ்வதில் அந்நாடு 52-வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதில் 28 சதவிகித வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்து வாழ்க்கை தங்களது தாய் நாட்டை வாழ்வதைப் போல உணர வைப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர். அதிலும் 52 சதவிகிதத்தினர் தாங்கள் தங்களை போன்ற வெளிநாட்டுவர்களுடன் தான் பழக முடிகிறது என்றும், 61 சதவிகிதத்தினர் உள்ளூர் மாவட்டத்தில் நண்பர்களுடன் நட்பு வைத்துக் கொள்வது கடினம் என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் சுவிட்சர்லாந்து விலைவாசியில் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், 58-வது இடத்தையே பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டினர் மக்களோடு இணைந்து வாழ்வதில் மிக மோசமான இடத்தையே சுவிட்சர்லாந்து பிடித்துள்ளது என்றும் பெரும்பாலோனோர் தெரிவித்துள்ளனர்.