தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .இதன் ஒரு பகுதியாக மே-24 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் தளர்வுகளற்ற ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதில் ஒரே ஒரு சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அத்தியாவசிய தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊடரங்கு நடைமுறையில் இருக்கும் போது அத்தியாவசியமற்ற பெரிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன என்று பாமக தலைவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். மகிழுந்து, கண்ணாடி, உதிரிபாக ஆலைகள் தற்போது இயங்க வேண்டிய தேவை என்ன? என்று கேள்வி எழுப்பி உள்ளார். நிறுவனங்கள் இலாபத்தை விட தொழிலாளர்களின் உயிர் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.