ஆஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள 150 அகதிகள் கனடாவில் தங்களுடைய வாழ்க்கையை புதிதாக தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மர், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை சேர்ந்த 150 அகதிகள் அங்குள்ள பரிசீலனை மையங்களில் சிறைக் கைதிகள் போல் வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் பயணித்து வரும் எந்த ஒரு நபர்களையும் அவர்கள் தங்களது நாடுகளில் குடியமர அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக அந்த அகதிகள் வெவ்வேறு தீவுகளில் உள்ள பரிசீலனை மையங்களுக்கு அனுப்பப்படுவர். இந்நிலையில் மொசைக் எனும் தொண்டு நிறுவனம் இந்த அகதிகளுக்கு உதவும் வண்ணம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதனையடுத்து இந்த தொண்டு நிறுவனம் ஆஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்த கைதிகளை மீட்டு அவர்கள் கனடாவில் குடியமர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மொசைக் நிறுவனம் இந்த அதிகள் ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டு கனடாவிற்கு சென்ற பிறகு அவர்களுக்கு தேவையான வீடு, வேலை முதலான அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் செய்து கொடுக்க உள்ளது. மேலும் மொசைக் அமைப்பின் மூத்த மேலாளரான சலீம் சபிண்டர் கூறும்போது இந்த அகதிகள் அவர்களுடைய குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவும் ஏற்பாடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.