காய்ந்த புற்களில் எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் பூபதி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் மீனாட்சி அவென்யூ குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இவரது நிலத்தில் வளர்ந்திருந்த காய்ந்த புற்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காய்ந்த புற்களில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.