தனியார் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் அமையவுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பல பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 1200 பேரில், 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மீதம் உள்ளவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அதிகாரிகள் கிணத்துக்கடவு அருகில் இருக்கும் தனியார் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து இவ்வாறு அமைய உள்ள சிகிச்சை மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கின்றதா என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ராம்குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்கள் வெளியே வருவதாக புகார் எழுந்ததால் இந்த கொரோனா சிகிச்சை மையத்தை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.