Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலே மாறி போச்சு… ரொம்ப சிரமமா இருக்கு… ஆட்டோ டிரைவரின் முயற்சி…!!

ஆட்டோ டிரைவர் ஊரடங்கு நேரத்தில் காய்கறி விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் மட்டுமே காய்கறி விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடுகபாளையம் பகுதியில் பிரபாகரன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவர் ஊரடங்கு சமயத்தில் வருமானம் இல்லாமல் தவிப்பதால் ஆட்டோவில் காய்கறி விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.

இதுகுறித்து பிரபாகரன் கூறும் போது, ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ ஓட்ட முடியாத காரணத்தால் வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே நகராட்சி மூலம் காய்கறிகளை வாங்கி விற்பனை செய்வதாகவும், விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் காய்கறிகளை அதிகம் வாங்குவதில்லை எனவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |