தெருநாய்கள் விரட்டியதால் தப்பிக்க முயற்சி செய்த புள்ளிமான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் தாமரைக் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் புள்ளிமான் ஒன்று இரவு நேரத்தில் இறையைத் தேடிக் அப்பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் புள்ளிமானை பார்த்ததும் அதனை துரத்தி சென்றுள்ளது. அப்போது தெருநாய்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்த அந்த புள்ளிமான் குளத்தில் குதித்து விட்டது.
அதன்பின் அந்த குளத்தில் தாமரைகள் அதிகளவு படர்ந்து இருந்ததால் புள்ளிமானால் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் இணைந்து புள்ளிமானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன் பின்பு வனத்துறையினர் குழுமூர் காப்பு காட்டிற்கு கொண்டு சென்று புள்ளிமானின் உடலை குழிதோண்டி புதைத்து விட்டனர்.