Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் போராட்டம் வெற்றியடைய வேண்டும்…. கமல்ஹாசன்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு அவர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி தற்போது வரை போராட்ட களத்தில் 450க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதனால் ரயில் மறியல் போராட்டம், உண்ணாவிரதம், மாபெரும் டிராக்டர் பேரணி உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்திய போதிலும் எந்த பலனும் இல்லை.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் ஆறு மாதங்களை எட்டியுள்ளது. ஓராண்டு கால கொரோனா உள்ளிருப்பு காலத்திலும் விளை பொருட்கள் தட்டுப்பாடு என்று எப்படிக் கிடைத்தது என யோசித்தாலே விவசாயிகளின் மேன்மையும் தியாகமும் புரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |