நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றி திரிந்த 216 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போதும் தேவையின்றி வெளியே சுற்றி திரியும் நபர்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முகக் கவசம் அணியாமல் வந்த 534 பேரிடம் இருந்து 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர். இதனைத்தொடர்ந்து ஒரே நாளில் 216 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் முக கவசம் அணியாமல் வெளியே வரக் கூடாது எனவும், மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.