தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் முக்கிய பிரபலங்கள் மட்டும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் தடுத்து செலுத்திக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மெட்ராஸ் மற்றும் கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரித்திகா முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். மேலும் மக்கள் அனைவரும் தேவை இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்து,வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் எல்லோரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.