Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி…. பைசர் நிறுவனம் மத்திய அரசுக்கு நிபந்தனை….!!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தேவை என்றால் முன்னதாகவே ஆர்டர் செய்து முன்பணம் செலுத்த வேண்டுமென பைசர் நிறுவனம் மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளது. மற்ற நாடுகள் தங்களிடம் தடுப்பூசி வாங்கும் போது இதே முறையை பின்பற்றுவதாகவும், எனவே முன்பணம் செலுத்த வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |