ஆம்பூரில் புதிதாக துவங்கப்பட இருக்கின்ற சித்த மருத்துவ முகாமை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் வித்ய விஹார் கல்விக் குழும வளாகத்தில் கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சித்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் விரைவில் துவங்கப்பட இருப்பதால் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்தி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து அமைச்சர் சித்த மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்துள்ளார். அதன்பின் ஆம்பூரில் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் அமைச்சர் ஆர். காந்தி ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், எம். எல். ஏ. க்கள் க. தேவராஜி, அ. செ. வில்வநாதன், வாணியம்பாடி உதவி கலெக்டர் காயத்ரி சுப்பிரமணி, ஆம்பூர் நகராட்சி ஆணையர் த. சவுந்தரராஜன் ஆகியோர் அவருடன் இருந்துள்ளனர்.