டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர்.
இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் தன்னுடைய வழக்கறிஞ்சர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் உடன் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். பின்னர் டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து ப.சிதம்பரம் வீட்டிற்குள் நுழைந்தார்.
அவரை பின்தொடர்ந்து வந்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் சென்று வீட்டிற்குள் நுழைய முற்பட்டனர். அப்போது வீட்டின் கதவு பூட்டி இருந்தன் காரணமாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து வீட்டிற்குள் சென்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது டெல்லி போலீஸ், சிபிஐ , அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டில் குவிந்து வருகின்றனர்.ப.சிதம்பரம் தன்னுடைய வழக்கறிஞ்சர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி_யுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். வெளியே அதிகாரிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். பொதுவாக இரவு நேர கைது உறுதியாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.