சட்ட விரோதமாக மறைத்து வைத்திருந்த 2500 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் காவல்துறையினருக்கு துரிஞ்சல் ஆற்றின் கரையோரத்திலும், வசந்த கிருஷ்ணாபுரத்திலும் சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பேரல்கள், பாத்திரங்கள் மற்றும் மண்பானைகளில் 2500 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள சாராய ஊறலை பறிமுதல் செய்து தரையில் ஊற்றி அழித்துவிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.